Impression – Tamil
- Home
- Impression – Tamil
கந்தசாமி,
( நகர் மன்ற தலைவர் வெள்ளகோவில் நகராட்சி)உலக நண்பர்கள் தினமான இந்த நன்னாளில் சர்வாலயம் என்ற இந்த முதியோர் இல்ல விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியாக் உள்ளது.
சர்வாலயத்தின் செயல்பாடுகள் மேன்மேலும் சிறக்க எனது வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சுப்புலட்சுமி,
ஈரோடு.வெள்ளகோவிலில் இயங்கி வரும் சர்வாலயா முதியோர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியும், மனநிறைவும் கொண்டேன். கருணை உள்ளமும் சேவை மனப்பான்மையும் கொண்ட பல நல்ல உள்ளங்களின் முயற்சியால் மிகப் பின் தங்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த இல்லம் ஒரு கூட்டுக் குடும்பமாகக் செயல்படுவது சிறப்பு.
இல்லத்திலேயே தங்கி முதியோர்களைத் தன் சொந்தச் சகோதர, சகோதரிகளைப் போல் பாதுகாத்து வரும் திருமதி.கலா அவர்களின் சேவையை மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறேன்.
A.பரணி பழனிசாமி,
தலைவர், அவினாசி ரோட்டரி.நான் சர்வாலயம் வந்து சுற்றி பார்தேன். எனக்கு இங்கு மாபெரும் அனுபவமான பெரியோர்கள் அனாதை என்ற பெயரில் வந்து சொந்தக்காரர்களோடு வாழும் மகிழ்ச்சியை காண முடிந்தது. சில குடும்பத்தில் சின்ன வயசு குழந்தைகள் பெரியோர்களின் ஆசியும் ஆதரவும் இல்லாமல் வாடும் நிலை இந்த சர்வாலயத்தில் புரிந்து கொள்ள முடிகின்றது. என்பதை பார்க்கும் போது நமது இந்திய பண்பாடும் கலாச்சாரமும் எங்கு நோக்கி போகிறது என்பதை கண்டு மனது வேதனையடைகிறது. இந்த சர்வாலாயம் நடத்தும் அன்பர்களுக்கு இறைவனின் பரிபூர்ண ஆசி கிடைக்கட்டும் என்று வாழ்த்தும்.
கண்ணம்மா
இது கடவுளின் இல்லம் இங்கு எல்லாம் அவர் எண்ணம் .
இதை நான் உணர்ந்தேன் வாழ்த்துக்கள்.
மேகலா
கோவைஅனாதைகளை அரவணைக்கும் இல்லத்தின் தன்னலமற்ற தியாகச் செயலுக்கு இறைவன் என்றைக்கும் ஆசி வழங்க வேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்கிறேன்.
STEPHAN.Y
FARM MANAGER, RFS FARM, CHENNAI – 52.இந்த இல்லம் அன்புடனும் அற்பண்ப்புடனும் நடத்தப்படுகிறது.
தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுகிறது. நல்ல பண்புடைவர்களுக்கு. இங்கு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த வாய்பு கொடுத்த உரிமையாளர்களுக்கு என் வாழ்த்துகள் மற்றும் நன்றி.
CEO
TRICHY DT.இன்று சர்வாலாயா முதியோர் இல்லம் வந்து வயதானோரிடம் பேசியதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய பெரியம்மா இவர்களால் மிகச்சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகிறார்கள். சர்வாலயா டிரஸ்ட் உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
மு.மாணிக்கவேலு,
வட்டாட்சியர், காங்கயம்.இல்லத்தைப் பார்வையிட்டேன் மிகவும் சுத்தமாகவும் பராமரித்து வருவது பாராட்டுக்குரியது. வயதால் முதியவர்களாகிவிட்டாலும் குழந்தைகளாக மாறிவிட்ட அவர்களிடம் இல்ல நிர்வாகிகளும் பணியாளர்களும் கனிவுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சிக்கும் போற்றுதலுக்கும் உரியது.
இங்குள்ள முதியோர்களும் இந்த இல்லத்தை நிர்வகிப்பவர்களும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுக்கிறேன்.
செ.ராணி,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சொரியங்கிணத்துப்பாளையம்.பள்ளி பரிமாற்றுத்திட்டம் களப்பணி என்ற திட்டம் மூலம் நாங்கள் சர்வாலயம் என்ற இடத்திற்கு வந்துள்ளோம். இங்கு நாங்கள் மனநிறைவும், மிக்க மகிழ்ச்சியும் பேரின்பமும், தகவல் சேகரிப்பு களஞ்சியமாகவும் பெரியோர்களை மதித்தல், ஆதரவு மற்றும் அடைக்களம் என்ற பண்பு மாணவர்களின் மனதில் மிகவும் ஆழமான செய்தியாக பதிந்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்து கொள்வதுடன் மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு வாய்ப்பு தந்த சர்வாலயம் (அம்மா) மற்றும் பெரியோர்கள் குழந்தைகள் அனைவருக்கும் எம் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Myruthi vidhya Bhavan School
31.10.2018We the teachers and students from myruthi vidhya bhavan school had a wonderful experience with these giffted people. Thanks a lot for giving this opportunity.
Prema Balakrishnan
02.03.2016After coming to this sarvalayam. I was surprised to see how well organised the place is . I feel the inmates are all happy and contented in their twelight years. Mrs.kala is doing a very good job here and i wish her all the best wishes us her future plans.
May god blessings be with you
Dr.Harayan & Team CEO, IDF Mumbai
16.02.2016Sarvalayam is a serene place/home for the people who are in the evening of their life. A soulful visit and a satisfying day for team idf as we spent the morning hours of this day with the elderly people. A divine place for those who seek blessings. Madam-mother kala is giving her best to bring smiles on many lives. God bless