‘சர்வாலயம் ‘ – இது ஆதரவற்ற முதியவர்களை அவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதியும் மகிழ்ச்சியாக அமைய அன்பை, அரவணைப்பை, பாசத்தை, கருணை உள்ளத்தோடு வழங்கிக் கொண்டிருக்கும் ஓர் ஆலயம்.

திருக்கோயில்களில் பக்தர்கள் அங்குள்ள தெய்வங்களை வணங்குகிறார்கள். சிலர் தெய்வத்திடம் சில கோரிக்கைகளை வைப்பார்கள். இந்த ஆலயத்தில் நாங்கள் ஆதரவற்ற அந்த முதியவர்களை வணங்கி மகிழ்கிறோம்.

            அதே போல் இங்கு வளரும் சிறுமிகளுக்கு சிறப்பான ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி தர அனைத்து வகைகளிலும் முயற்சித்து வரும் சர்வாலயம் அந்த சிறுமிகளின் குதுகலத்தில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறது .

            சர்வாலயம் இரு தரப்பினரின் பொழுது போக்கிற்கு ஏற்ப தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள், விளையாட்டு மைதானம், ஆன்மீகத்திற்கு கோவில்கள், நாட்டியம், யோகா, தியானம், கலை பொருட்கள் தயாரிப்பது, ஆயிரக்கணக்கான புத்தகங்களுடன் நூலகம்.

ஆம்னி வேன் சிறுமியர் கற்கின்ற மூன்று பள்ளிகளுக்கு  செல்லவும் , முதியோர்கள் மருத்துவமனை சென்று வரவும் இதர வேலைகளுக்கும் பயன்படுகிறது.

            சர்வாலய அறைகளிலும் வளாகத்திலும் சுகாதாரம் சிறப்பாக பேணிகாக்கப்படுக்கின்றது.

            எல்லோராலும் ‘கலா அம்மா’ என்று பாசத்தோடு அழைக்கப்படும் திருமதி.கலாவதி அவர்கள் ‘அன்னையால்’ ஆசீர்வதிக்கப்படுபவர் புதுச்சேரி ஆசிரமத்தில் பணியாற்றியவர். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரின் தியாக உள்ளம் வறியவர்களுக்கு உதவுவதே. அதனால், தான் பலலட்சம் பெறுமானமுள்ள சுமார் 2 1/2 ஏக்கர் இடத்தை ‘சர்வாலயம்’ கட்ட இலவசமாக கொடுத்தார். அதோடு ஓய்வுக்கே ஓய்வு கொடுத்த ஓய்வறிய உழைப்பாளி ‘சர்வாலயம்’ ஒன்றே தன் உலகமாக நினைத்து பணியாற்றிவருகிறார்.

             நீலகிரியில் பூர்விக்கமாக கொண்ட பலராலும் ‘ராஜ்மா’ என்று செல்லமாக அழைக்கப்படும். அவர்கள் கலாவதி அம்மா அவர்களின் வலது கையாக செயல்படுபவர். பல மாற்று வழிகளை செயல்படுத்தி சிறப்பு சேர்ப்பதில் வல்லவர். திட்டமிட்டு செயலாற்றும் அவர் சிறந்த கல்வியாளர், மத்திய, மாநில விருதுகளை பல முறை  பெற்றுள்ளார். கலா அம்மாவின்  நிழலாக ராஜ்மா சர்வாலயத்தின் இரு கண்கள்.

            இருவரின் பாசம் கலந்த கண்டிப்பு, அன்பு கலந்த அறிவுரை, பண்பு கலந்த பழக்க வழக்கம் அனைவரையும் கவர்ந்திருக்கும். இருவரும் பல்லாண்டு வாழ்ந்து பல்வேறு பணிகளை நிறைவு செய்வார்கள். சர்வாலயத்துக்கும், நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்.

                                                             நன்றி

 

                                                                                                                                         இப்படிக்கு,

                                                                                                                                         K.K.பழனிச்சாமி