திரு.K.மாரப்பன், B.Com.,
சர்வாலய அறக்கட்டளை உறுப்பினர்.
ஸ்ரீ செந்தில் முருகன் சிட்ஸ்(பி) லிட்,
Managing Director,
திருப்பூர்.

சர்வாலயம் ஆதரவற்ற முதியோர்களின் சரணாலயமாகத் திகழ்கிறது. இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் அரசு உதவி ஏதுமின்றி முற்றிலும் அறக்கட்டளை உறுப்பினர்களின் பொருட்செலவில் நிர்வகித்து வரப்படுகின்றது. ஆதரவற்ற சிறுமியர்களையும் பராமரித்து வருகின்றது சர்வாலயம். திருமதி. கலா கனகசபாபதி, மேனேஜிங் டிரஸ்டி அவர்கள், தன்னலமின்றி தன் வாழ்வை இல்லத்திற்காக அர்பணித்துள்ளார். இவர் எளிமைக்கும், சேவைக்கும், பெண்ணினத்திற்கும் ஓர் முன் உதாரணம். கல்வி, ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம், விளையாட்டு போன்றவற்றில் பயிற்சி அளிக்கும் திறமை படைத்த, இந்திய ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்ட Dr.ராஜம்மா அவர்கள் (Retd கேந்திரிய வித்யாலயா) சென்னையில் இருந்து வந்து, இங்கு சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். அவர்களும், திருமதி. கலா கனகசபாபதியும் இணைந்து செயல்படுவது சர்வாலயத்திற்கு பெருமையான விஷயம்.

சென்னை சில்க்ஸ் போன்ற பெரிய ஸ்தாபனங்களின் ஒத்துழைப்பால் மிக நன்றாக செயல்படுகிறது.

சர்வாலயம் முதியோர்களையும், சிறுமியர்களையும் இணைக்கும் பாலமாய், ஒருங்கிணைந்த இல்லமாய் வளர்ந்து வருகின்றது.

இங்கு தங்கியுள்ள முதியோர்களுக்கும் சிறுமியர்களுக்கும் மனமார ஆதரவு தருவதில் நல்ல உள்ளம் கொண்ட எண்ணற்ற புண்ணியவான்களின் பங்கு மிக மகத்தானது.

முதியோர்களின் நலனின் அக்கறை செலுத்துவோம்!

தள்ளாத வயதில் அவர்களிடம் அனுசரணை காட்டுவோம்!

பெண் குழந்தைகளை மதித்து மேம்படுத்துவோம்!