சர்வாலயம் ஆதரவற்ற முதியோர்களுக்காக 2013-யில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அழகிய, அமைதி நிறைந்த இல்லம். அன்பும், அரவணைப்பும் இந்த இல்லத்தின் குறிக்கோள்.
2019-ம் ஆண்டு சர்வாலயம் முதியோர் மற்றும் சிறுமியர் ஒருங்கிணைந்த வளாகமாக மாறியது. இரண்டு தலைமுறைகளை அன்பால் இணைக்கும் பாலமாக அமையப் பெற்றது இதன் சிறப்பு.
வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதீர்கள்
ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்
ஒரு லட்சியம் – சாதியுங்கள்
ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் – வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் – நடத்திமுடியுங்கள்…!
எ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் பொன் மொழிக்கேற்ப சர்வாலயம் வழி நடத்தப்பட்டு வருகின்றது.
இருகரம் கூப்பி இறைவனை வணங்குவதைக் காட்டிலும் ஒரு கரம் நீட்டி பிறருக்கு உதவும் மனப்பாங்கு மேன்மையானது. அனைத்து நல் உள்ளங்களின் ஆதரவால் சர்வாலயம் ஆதரவற்றோர்கான சேவையினை சிறப்பாக நடத்தி வருகின்றது.
வெ.சக்திவேல், B.com, FCA,
(பட்டயகணக்களாளர்)
& திருமதி. மல்லீஸ்வரி சக்திவேல்,
சேலம்.
Copyrights © 2020 sarvalayam. All rights reserved. Nandha Infotech